மஹாலக்ஷ்மி தாயார் உதித்த நட்சத்திரமான உத்திரம் பிரதி மாதம் உத்திரம் நட்சத்திர தினத்தன்று அதிகாலை கோ பூஜையூடன் ஆரம்பித்து சிறப்பாக செய்து ,தொடர்ந்து ஸ்ரீ ஸூக்த ,ஸுதர்சன, தன்வந்தரி ஹோமங்கள் நடைபெறும் .அதனை தொடர்ந்து விசேஷ திருமஞ்சனமும், திருவாராதன ,சாற்றுமுறையும் நடைபெறும். மாலை ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு அர்ச்சனை நடைபெறும் .
சுக்ர வாரம் என்று சொல்லக்கூடிய வெள்ளிக்கிழமை காலை நேரத்திலும் , உத்திரம் நட்சத்திர தினத்தன்று காலை வேளையிலும் விசேஷ திருமஞ்சனமும், திருவாராதன ,சாற்றுமுறையும் நடைபெறும். மாலை ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு அர்ச்சனை நடைபெறும் .
வெள்ளிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் பிரசாத வினியோகமும் , உத்திரம் நட்சத்திர தினத்தன்று காலை வேளையில் பிரசாத வினியோகமும் , மாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும் .
லக்ஷ்மீ என்றால் சகல செல்வங்கள் வரும் வழி என்று பொருள். அதிருஷ்டம், செல்வம், வளமை, செழிப்பு, நற்பேறு (Good fortune, prosperity) என்று பல பொருள்கள். உலகில் உள்ள சகல வகை மூலகங்களிலிருந்தும் நாம் பெறும் பயன்கள், பெறும் செல்வங்கள் அனைத்தும் அவை வருவதற்கான காரணியும் லக்ஷ்மியே, லக்ஷ்மியின் அம்சங்களே.